NATIONAL

இந்தோ. தற்காப்பு அமைச்சர் பிரதமர் அன்வாரைச் சந்தித்தார்- இரு தரப்பு நலன்கள் குறித்து விவாதம்

1 டிசம்பர் 2023, 3:27 AM
இந்தோ. தற்காப்பு அமைச்சர் பிரதமர் அன்வாரைச் சந்தித்தார்- இரு தரப்பு நலன்கள் குறித்து விவாதம்

கோலாலம்பூர், டிச 1- மலேசியாவுக்குப் பணி நிமித்த வருகை

மேற்கொண்டுள்ள இந்தோனேசிய தற்காப்பு அமைச்சர் ப்ராபோவோ

சுபியான்தோவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புத்ரா

ஜெயாவிலுள்ள ஸ்ரீ பெர்டானாவில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது நாட்டின் தற்காப்பு, அமைதி உள்பட இரு தரப்பு

நலன்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக

அன்வார் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இரு அண்டை நாடுகளின் நல்லுறவு தொடர்ந்து நீடிக்கும் என்பதோடு

காலத்திற்கு நிலைத்திருக்கும் எனத் தாம் நம்புவதாக அவர் அப்பதிவில்

கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் மற்றும்

துணை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சம்சுல் அனுவார்

நசாராவும் கலந்து கொண்டனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.