NATIONAL

கிளந்தான், திரங்கானுவில் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கையில் மாற்றமில்லை

30 நவம்பர் 2023, 1:20 PM
கிளந்தான், திரங்கானுவில் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கையில் மாற்றமில்லை

கோலாலம்பூர், நவ 30- திரங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய

மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில்

மாற்றமில்லை.

கிளந்தானில் உள்ள மூன்று தற்காலிக துயர் துடைப்பு மையங்களில்

நேற்றிரவு 101 குடும்பங்களைச் சேர்ந்த 317 பேர் அடைக்கலம் நாடியிருந்த

வேளையில் இன்று காலை 8.00க்கும் அதே எண்ணிக்கையிலானோர் அங்கு

தங்கியுள்ளனர்.

பாசீர் மாஸ் மாவட்டத்தில் உள்ள தோக் டே தேசிய பள்ளியில் 79

குடும்பங்களைச் சேர்ந்த 231 பேர் தங்கியுள்ளதாக மாநில சமூக நலத்

துறையின் பேரிடர் மேலாண்மை தகவல் செயலி கூறியது.

பாச்சோக், பெரிஸ் பாச்சோர் தேசிய பள்ளியில் 14 குடும்பங்களைச் சேர்ந்த

58 பேரும் ஜெலாவாட் தேசியப் பள்ளியில் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த

28 பேரும் தங்கியுள்ளனர்.

திரங்கானு மாநிலத்தில் கோல திரங்கானு, அத்தாஸ் டோல் தேசிய

பள்ளியில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் அடைக்கலம்

நாடியுள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் வடிகால் முறையில் காணப்படும் பிரச்சனைகள்

காரணமாக வீடுகளில் நீர் தேங்கியுள்ளதால் பாதிக்கப்பட்ட மக்கள்

இன்னும் வீடு திரும்ப முடியாத நிலையில் உள்ளதாக மாநில பேரிடர்

மேலாண்மை செயலகம் தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.