ECONOMY

இந்திய சமுதாயத் தலைவர்களின் சன்மானத்தை உயர்த்த வேண்டும் கணபதி ராவ் அறைக் கூவல்

30 நவம்பர் 2023, 10:02 AM
இந்திய சமுதாயத் தலைவர்களின் சன்மானத்தை உயர்த்த வேண்டும் கணபதி ராவ் அறைக் கூவல்
இந்திய சமுதாயத் தலைவர்களின் சன்மானத்தை உயர்த்த வேண்டும் கணபதி ராவ் அறைக் கூவல்

கிள்ளான்.நவ.30-  சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமுதாயத்தின் தேவைகள் பூர்த்தி செய்ய ஆட்சி மாற்றத்திற்கு பிறகு  டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இந்திய சமுதாய கிராமத் தலைவர்கள் என்ற பிரதிநிதித்துவதை கொண்டு வந்தார். கடந்த 10 ஆண்டுகளில் அவர்களது மாதாந்திர சன்மானம் ரி.ம. 1,500.00 ஆக உயர்த்தப் பட்டது. மேலும் இன்றைய நிலையில் 62 பேராக உயர்த்தப் பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் கூறினார்.

சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயிடு தலைமையில் 62 இந்திய சமுதாயத் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சி முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்திய சமுதாய தலைவர்களின் மாதாந்திர சன்மானத்தை உயர்த்த வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

அதே போல் அவர்களின் வருடாந்திர மானியம் ரி.ம. 10,000.00 த்திலிருந்து ரி.ம. 30,000.00த்திக்கு உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

டாக்டர் சேவியர் ஜெயகுமார் தான் இந்திய சமுதாயத் தலைவர்கள் என்ற பொறுப்பை உருவாக்கினார். அவரது காலத்தில் 40 பேர் இப் பதவியிலிருந்தனர். எனது காலத்தில் 62 பேராக உயர்த்தினேன். மேலும் மாநில மந்திரி புசார் அமிருடின் சாரியின் தலைமைத்துவத்தின் கீழ் ரி.ம. 1,500.00 மாதாந்திர சன்மானம் உயர்த்தினேன்.

இந்திய சமுதாய தலைவர்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரோடு இணைந்து சேவையாற்ற வேண்டும். அவர்களின் மானியத்தை பெற்று மேலும் சிறப்பாக சேவை ஆற்றுங்கள்  என்று ஊக்கப்படுத்தி அனைவரின் சேவையையும் பாராட்டினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.