NATIONAL

வங்காளதேச செய்தியாளர் கடத்தல் தொடர்பில் போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

30 நவம்பர் 2023, 7:40 AM
வங்காளதேச செய்தியாளர் கடத்தல் தொடர்பில் போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

கோலாலம்பூர், நவ 30 - அண்மையில் வங்காளதேச செய்தியாளர் ஒருவர்

கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும்

மூன்று போலீஸ்காரர்களில் ஒருவர் பணியிடை நீக்கம்

செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் முடிவுகள் மற்றும் தேவையைக் கருத்தில் கொண்டு இதர

இருவரை பணியிடை நீக்கம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று

கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மஜிட்

கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த

வழக்கு சிலாங்கூர் போலீஸ் துறையையும் சம்பந்தப்படுத்தியுள்ளதால்

தொடர் நடவடிக்கையின் முடிவுக்காக காத்திருக்கிறோம். கோலாலம்பூர்

போலீஸ் துறையைப் பொறுத்த வரை நாங்கள் நடவடிக் எடுத்து

விட்டோம் என்றார் அவர்.

கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர

ஒன்று கூடும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம்

அவர் இதனைத் தெரிவித்தார்.

தங்களை போலீஸ்காரர்கள் எனக் கூறிக் கொண்ட சில ஆடவர்கள்

தன்னைக் கடத்திச் சென்று கிள்ளானிலுள்ள வீடொன்றில் மூன்று

தினங்கள் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாக அந்த வங்காளதேச

பத்திரிகையாளர் கடந்த நவம்பர் 7ஆம் தேதி போலீசில் புகார்

அளித்திருந்தார்.

தடுத்து வைத்திருந்த காலத்தில் அக்கும்பல் தன்னை கடுமையாகத் தாக்கி

காயப்படுத்தியதோடு விடுதல் செய்வதற்கு 19 லட்சம் வெள்ளி

பிணைப்பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாகவும் 30 வயதான

அந்த நபர் தனது புகாரில் கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.