NATIONAL

மனைவிக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக ஆடவருக்கு 14 ஆண்டுச் சிறைத் தண்டனை

30 நவம்பர் 2023, 3:30 AM
மனைவிக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக ஆடவருக்கு 14 ஆண்டுச் சிறைத் தண்டனை

தாவாவ், நவ 30 - ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தன் மனைவிக்கு மரணம்

ஏற்படக் காரணமாக இருந்த காரணத்திற்காக எட்டு பிள்ளைகளுக்குத்

தந்தையான ஆடவர் ஒருவருக்கு இங்குள்ள உயர் நீதிமன்றம் 14 ஆண்டுச்

சிறைத்தண்டனை விதித்தது.

ஜக்காரியா அபு பாக்கார் (வயது 56) என்ற அந்த ஆடவர் கைதான தினமான

2019ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதியிலிருந்து தண்டனையை

அனுபவிக்க வேண்டும் என நீதிபதி டத்தோ டாக்டர் லிம் ஹோக் லெங்

தீர்ப்பளித்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி அதிகாலை 4.00

மணியளவில் செம்பூர்ணா, கம்போங் பிங்கிர் பாக்காவில உள்ள

இலக்கமிடப்படாத வீட்டில் நோர்மினா பால்லோக் (வயது 39) என்ற

பெண்ணுக்கு மரணம் விளைவித்ததாக அவர் மீது

குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடக்கத்தில் கட்டாய மரண தண்டனை வழங்க வகை

செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் தாக்கல்

செய்யப்பட்டிருந்தது. எனினும், கணவன்-மனைவிக்கிடையிலான

சண்டையின் விளைவாக பாராங் கத்தியைப் பறிக்கும் முயற்சியில்

மரணம் ஏற்படும் அளவுக்கு சினமூட்டும் செயல்கள் இருந்துள்ளது

விசாரணையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இவ்வழக்கு 304வது

பிரிவுக்கு மாற்றப்ப்பட்டது.

அரசுத் தரப்பில் துணை ப ப்ளிக் புரோசிகியூட்டர் ஹுர்மான் ஹூசேன்

வழக்கை நடத்திய வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில்

வழக்கறிஞர் எண்டி தாய் ஆஜரானார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.