ECONOMY

இந்தியர்களை தொழில் முனைவோர்களாக  உருமாற்றுவதில் சித்தாம் முன்னணி.

29 நவம்பர் 2023, 10:27 AM
இந்தியர்களை தொழில் முனைவோர்களாக  உருமாற்றுவதில் சித்தாம் முன்னணி.

செய்தி.சு.சுப்பையா

பெட்டாலிங்  ஜெயா.நவ.28-  சிலாங்கூர் மாநில இந்தியர்களை தொழில் முனைவோர்களாக உருமாற்றுவதில் சித்தாம் முன்னணி வகிக்கிறது.

குறிப்பாக டிக் டாக் வலை தளத்தின் வாயிலாக வருமானத்தை எப்படி உயர்த்திக் கொள்ளலாம் என்பதற்கான இரண்டு நாள் பயிற்சியை வழங்கி வருகிறது. மூன்று கட்டமாக இப்பயிற்சி வழங்கப் படுகிறது. இன்று மூன்றாம் கட்ட பயிற்சியில் கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து 30 வளரும் தொழில் முனைவர்கள் கலந்துக் கொண்டு சான்றிதழையும் பெற்றுக் கொண்டனர் என்று சித்தாம்  தலைமை நிர்வாகி கெனத் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா வில் உள்ள பிரபல தங்கும் விடுதியில் 2 நாள் டிக் டாக் பயிற்சியை சித்தம் நடத்தியது.  முதல் கட்ட பயிற்சியில் கேக் செய்வதை  கற்றுக்கொண்டு, அடுத்து சந்தைப்படுத்துதல்  குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.  இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பகுதி நேர தொழிலாக குடும்ப மாதர்கள் செய்து வருகின்றனர்.

முதல் பயிற்சியில் கலந்துக் கொள்ளும் வளரும் தொழில் முனைவோர்களை சித்தாம் தொடர்ந்து கண்காணித்து வந்தது. வீட்டில் இருந்து சொந்த தொழில் செய்து வரும் குடும்ப மாதர்களின் வருமானத்தை மேலும் அதிகரிக்க வேண்டி தொடர்ந்து சிறப்பு பயிற்சிகளை மெடெக் அகடெமியின் வழி நடத்துகிறது.

இந்த இரண்டு நாள் பயிற்சியில் டிக் டாக்  வழி  உற்பத்தி பொருட்களை எப்படி சந்தைப் படுத்துவது, அதற்கான காணொளியை எப்படி தயாரிப்பது. அதனை எப்படி பதிவு செய்த பின்னர் டிக் டாக்கில்  எப்படி விளம்பரம் செய்வது என்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மேலும் டிக் டாக் வழி வியாபாரத்தில் எப்படி ஈடு படலாம். வருமானத்தை எப்படி அதிகரிக்கலாம் என்று இப் பயிற்சியில் கற்றுத் தரப்படுகிறது.

இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களில் சிலர் ஒரு வாரத்துக்கு ரி.ம. 200.00 முதல் ரி.ம. 1,000.00 வரை வருமானத்தை அதிகரித்துள்ளனர்.

சிலாங்கூர் மாநில மக்கள் மாதத்திற்கு ரி.ம. 5,000.00 வருமானத்தை அடைய வேண்டும் என்று  இலக்கு வகுத்துள்ளது.  இந்தியர்களும் அந்த இலக்கை அடைய வேண்டும் என்பது சித்தாமின் இலக்கு என்று கெனத் தெரிவித்தார்.

சிலாங்கூர் ஹிஜ்ராவில் இடைக்கால தலைமை அதிகாரி புவான் நோர்ஹிசிமா, பெட்டாலிங் நாடாளுமன்ற உறுப்பினரின் சமூக நல  சேவையின் சிறப்பு அதிகாரி புவான் சூ ஒய் கிங் ஆகியோர் கலந்து கொண்டு, இந்திய தொழில் முனைவோர்களுக்கு நற்சான்றிதழை எடுத்து வழங்கினார்.

சிலாங்கூர் ஹிஜ்ராவின் வழி மற்றொரு பயிற்சியும் மலாய்க்காரர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்கும் நிறைவு விழாவில் நற்சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.

இந்த 2 நாள் பயிற்சியில் மொத்தம் 68 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.