ஷா ஆலம், நவ 28- சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளானில் இன்று மாலை
4.00 மணி வரை இடியுடன் கூடிய அடை மழை பெய்யும் என வானிலை
ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
சபா மாநிலத்தின் தாவாவ், சண்டகான், கூடாட் ஆகிய இடங்களிலும் இதே
போன்ற வானிலை நிலவும் என்று அத்துறை தனது பேஸ்புக் பதிவில்
குறிப்பிட்டுள்ளது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாக மணிக்கு 20
மில்லி மீட்டர் என்ற அளவில் இடியுன் கூடிய கனத்த மழை
பெய்வதற்கான அறிகுறி தென்படும் பட்சத்தில் இந்த எச்சரிக்கை
விடுக்கப்படும்.
ஒவ்வொரு வெளியீடும் ஆறு மணி நேரத்திற்கும் மேற்போகாத
காலக்கட்டத்திற்கு மட்டுமே செல்லுபடியாகக்கூடிய குறுகிய கால
எச்சரிக்கையாக இந்த கனமழை எச்சரிக்கை விளங்குகிறது.
வானிலை தொடர்பான மேல் விபரங்களை http://www.met.gov.my என்ற
அகப்பக்கம் வாயிலாக அல்லது சமூக ஊடகங்கள் மற்றும் myCuaca எனும்
செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பொது மக்கள் அறிந்து
கொள்ளலாம்.




