மலாக்கா, நவ 28: ஊஜோங் பாசிரில் உள்ள பாசிர் புத்ரி அடுக்குமாடி குடியிருப்பில் தனது வீட்டின் ஜன்னலில் சிக்கிக் கொண்ட ஆறு வயது சிறுவன் தீயணைப்பு வீரர்களால் மீட்கப் பட்டான்.
வீட்டின் முன்பக்க கதவு பூட்டப் பட்டிருந்ததால் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடி நடைபாதை வழியாக வீட்டிற்கு வெளியே இருந்த தந்தைக்குச் சாவியை கொடுக்க அச்சிறுவன் உதவ முயன்றபோது இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மதியம் 1.10 மணியளவில் தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், ஆறு நிமிடங்களுக்குள் ஆறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்ததாகவும் ஆயர் கெரோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கைகளின் தலைவர் மூத்த தீயணைப்பு அதிகாரி II முகமட் நோர் முகமட் ஷா கூறினார்.
“தீயணைப்புத் துறையினர் வீட்டின் கதவை உடைத்து, ஜன்னலில் சிக்கியிருந்த சிறுவனைக் காப்பாற்றினார்,” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தீயணைக்கும் படையினர் சுமார் 10 நிமிடங்களில் அச்சிறுவனை காயமின்றி அகற்றினர் என்றார்.
– பெர்னாமா




