NATIONAL

மொனாக்கோ இளவரசரிடமிருந்து கெளரவ விருதை சிலாங்கூர் ராஜா மூடா பெற்றார்

28 நவம்பர் 2023, 3:46 AM
மொனாக்கோ இளவரசரிடமிருந்து கெளரவ விருதை சிலாங்கூர் ராஜா மூடா பெற்றார்

ஷா ஆலம், நவ. 28 - இங்குள்ள இஸ்தானா நெகாராவில் நேற்று நடைபெற்ற சிறப்பு  நிகழ்வின் போது சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷாவுக்கு மொனாக்கோ இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் கௌரவ விருதை வழங்கினார்.

மேன்மை தங்கிய ராஜா மூடாவுக்கு  Grand Officier de l'Ordre de Saint Charles எனும் அந்த உயரிய விருது  வழங்கப்பட்டது.

மொனாக்கோவில் தோற்றுவிக்கப்பட்ட  வம்சப் படையான செயிண்ட் சார்லஸின் மரியாதைக்குரிய பட்டமாக இது விளங்குகிறது. இது  ஆளும் மன்னரால் வீரத்தின் அடையாளமாக வழங்கப்படும் விருதுகளில் ஒன்றாகும்.

இந்த விருதுவ வழங்கும்  நிகழ்வின் படங்கள் நேற்றிரவு சிலாங்கூர் அரச அலுவலகத்தின் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவின் அடையாளமாக இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் தற்போது நான்கு நாள் அதிகாரப்பூர்வ வருகை  மேற்கொண்டு மலேசியாவிற்கு வந்துள்ளார்.

முன்னதாக, நேற்று அவர் இஸ்தானா நெகாராவில் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ வரவேற்பை ஏற்றுக் கொண்டார். மாட்சிமை தங்கிய பேரரசர்  அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தஃபா பில்லா ஷா அல்ஹாஜ் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.