ECONOMY

மலிவு விற்பனையில் 200 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு  பலன், கிறிஸ்துமஸ்  சேமிப்பு

26 நவம்பர் 2023, 8:38 AM
மலிவு விற்பனையில் 200 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு  பலன், கிறிஸ்துமஸ்  சேமிப்பு

கிள்ளான், 26 நவ: தாமான்  பாம் க்ரோவ்   நடைபெற்ற பண்டமாறன் மாநில சட்டமன்ற தொகுதி நிலையிலான மலிவு  விற்பனை திட்டத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்தன.  பாம் க்ரோவ் பார்க் ருக்குன் தெத்தாங்கா தலைவர் மைக்கேல் சம் கூறுகையில், சில வருகையாளர்கள் கிறிஸ்துமஸ்க்கு  முன்கூட்டியே தயார் செய்ய ஷாப்பிங் செய்கின்றனர்.

பண்டிகை  காலங்களில்  அதிகம் தேவைப்படும்  பொருட்களில் சமையல் எண்ணெய் மற்றும் அரிசி , முட்டை ஆகியவை அடங்கும்.

"பல்வேறு இன குடியிருப்பவர்களுக்கு இந்த  மலிவு விற்பனையை ஏற்பாடு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சிலர் கிறிஸ்துமஸ் ஆயித்தமாகாக செலவிடுகிறார்கள், சிலர் அன்றாட தேவைகளுக்காக செலவிடுகிறார்கள்.

சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) நடத்தும் மலிவு விலையில் அடிப்படைப் பொருட்கள் விற்பனைத் திட்டத்தில் சந்தித்தபோது, "இன்றைய நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஷாப்பிங் செய்ய வந்ததைக் கண்டோம். என அவர்  தெரிவித்தார்..

43 வயதான கே விஜயா, ஜுலான் எஹ்சான் ரஹ்மாவில் (ஜேஇஆர்) ஷாப்பிங் செய்வதில், சில பொருட்களை வாங்கும் வரம்பு இருந்தாலும், நிறைய சேமிக்க முடிவதாக  கூறினார். "இங்கு  பொருட்க்கள்  வாங்குவது  சந்தைகளை விட மிகவும்  மலிவாகவும் , திருப்தியாகவும்  உள்ளது.  வீட்டிற்கு அருகாமையில் விடுமுறை நாட்களில் இந்த விற்பனை நடைபெறுவதால் நான் பயன்படுத்திக் கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.

அரசு சேவையிலிருந்து  ஓய்வு பெற்ற 74 வயது  மாட் நூரி  அப்துல் ரஹ்மான், PKPS சில்  விற்கும் பொருட்கள் உயர் தரத்தில் உள்ளதாகவும், விலைகளும் மலிவு மற்றும் எதிர்காலத்தில் மலிவு  விற்பனைத் திட்டம் தொடரும் என்று அவர் நம்புவதாக கூறினார்.

“அன்றாட தேவைக்கு நான் ஷாப்பிங் செய்வேன். அதே சமயம் வீட்டில் அரிசி அதிகமாக இருந்தால் பக்கத்து வீட்டுக்காரருக்கு தானமாக கொடுப்பேன். "தற்போது பொருட்களின் விலை திடீரென அதிகரித்துள்ள நிலையில், மலிவான விற்பனை தேவைப்படுபவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கிறது. இது தொடரும் என நம்புகிறேன்,'' என்றார்..   ஜூவாலான் ஏசான் ரஹ்மா (JER) என்பது  மாநில -மத்திய அரசுடன்   இணைந்து நடத்தும் மிகப்பெரிய உதவித்தொகை வழங்கப்பட்ட விற்பனையாகும்.

மாநிலம் முழுவதும் உள்ள JER இன் சமீபத்திய  விற்பனை இடத்தை PKPS Facebook இல் அல்லது விற்பனை போஸ்டர் அல்லது linktr.ee/myPKPS இல் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் உறுதி படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.