கோலாலம்பூர், நவ 23 - ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கண்டாரின் 65வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்.
ஜொகூர் அரச குடும்பம் கருணை மற்றும் வழிகாட்டுதலுடன் ஆசீர்வதிக்கப்பட்டு நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் இறையாண்மையுடன் ஆட்சி செய்ய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக அவர் முகநூலில் தெரிவித்தார்.
இதற்கிடையில், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியும் தனது முகநூல் பதிவில், சுல்தான் இப்ராஹிமுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
"உங்கள் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் எப்போதும் இறைவனின் பாதுகாப்பு, நல்ல ஆரோக்கியம், ஆசீர்வாதங்கள் மற்றும் நீண்ட கால செழிப்பைப் பெறட்டும்" என்று அவர் தெரிவித்தார். .
- பெர்னாமா




