கோலாலம்பூர், நவ 23: நல்ல லாபம் கிடைக்கும் என நம்பி முதலீடு செய்து ஏமாற்றியதால், தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் RM598,680 இழந்தார்.
39 வயதான அந்த நபர், லாபகரமான வருமானம் தருவதாகக் கூறப்படும் இணையப் பங்கு முதலீட்டில் ஈடுபட்டிருந்த உள்ளூர் பெண்ணை சந்தித்தார் என பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.
"பாதிக்கப்பட்டவர் அம்முதலீட்டால் ஈர்க்கப்பட்டார் மற்றும் மொத்தம் RM598,680 செலுத்தினார், அப்பணம் நவம்பர் 14, 2022 முதல் நவம்பர் 11, 2023 வரை பல வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டது.
"ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு வாக்குறுதியளித்தபடி பணம் கிடைக்கவில்லை, மாறாக சந்தேக நபர் பணத்தை தனது நண்பரால் ஏமாற்றுப்பட்டு விட்டதாகவும் மற்றும் தனது முழு சொத்தையும் காவல்துறை பறிமுதல் செய்ததாகவும் பல்வேறு காரணங்களைக் கூறினார்," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாகப் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று அறிக்கை வந்ததாக முகமது ஃபக்ருடின் கூறினார்.
சமூகம் மிகவும் உணர்திறன் உடையவர்களாக இருக்க வேண்டும் என்றும், குறுகிய காலத்தில் லாபகரமான வருமானத்தை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்த படுவதாகவும் அவர் கூறினார்.
"மக்கள் முதலீட்டு நிறுவனத்தின் இருப்பை உறுதிசெய்ய, https://www.sc.com.my/
– பெர்னாமா




