NATIONAL

கிள்ளான், கோல சிலாங்கூர், கோல லங்காட்டில் இன்று நண்பகல் 12.00 மணி வரை அடை மழை

22 நவம்பர் 2023, 4:34 AM
கிள்ளான், கோல சிலாங்கூர், கோல லங்காட்டில் இன்று நண்பகல் 12.00 மணி வரை அடை மழை

ஷா ஆலம், நவ 22- சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான், கோல சிலாங்கூர்

மற்றும் கோல லங்காட் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று நண்பகல்

12.00 மணி வரை அடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபா மற்றும் சரவா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பலத்த

காற்றுடன் இடியுடன் கூடிய கனத்த மழையும் பெய்யும் என மலேசிய

வானிலை ஆய்வுத் துறை கூறியது.

சுமார் ஒது மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாக மணிக்கு 20

மில்லி மீட்டர் என்ற அளவில் இடியுன் கூடிய கனத்த மழை

பெய்வதற்கான அறிகுறி தென்படும் பட்சத்தில் இந்த எச்சரிக்கை

விடுக்கப்படும் என்று அத்துறை தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

ஒவ்வொரு வெளியீடும் ஆறு மணி நேரத்திற்கும் மேற்போகாத

காலக்கட்டத்திற்கு மட்டுமே செல்லுபடியாகக்கூடிய குறுகிய கால

எச்சரிக்கையாக இந்த கனமழை எச்சரிக்கை விளங்குகிறது.

வானிலை தொடர்பான மேல் விபரங்களை http://www.met.gov.my என்ற

அகப்பக்கம் வாயிலாக அல்லது சமூக ஊடகங்கள் மற்றும் myCuaca எனும்

செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பொது மக்கள் அறிந்து

கொள்ளலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.