NATIONAL

கிளந்தானை வெள்ளம் சூழ்கிறது- இரு துயர் துடைப்பு மையங்கள் திறப்பு

21 நவம்பர் 2023, 9:47 AM
கிளந்தானை வெள்ளம் சூழ்கிறது- இரு துயர் துடைப்பு மையங்கள் திறப்பு

கோத்தா பாரு, நவ 21-  வடகிழக்கு பருவமழை காரணமாக கிளந்தான் மாநிலத்தில் வெள்ளம் ஏற்படத் தொடங்கியுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட  முதல் இடமாகப் பாசீர் பூத்தே விளங்குகிறது. இங்கு இன்று காலை இரு துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டன.

டாலாம் ரூ தேசியப் பள்ளி மற்றும் வாக்கஃப் ராஜா தேசியப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள துயர் துடைப்பு மையங்களில் 71 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத் துறையின்  பேரிடர் தகவல் மையம் கூறியது.

டாலாம் ரூ நிவாரண மையத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த  42 பேரும்  வஹாஃப் ராஜா நிவாரண மையத்தில்  ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 29 பேரும் அடைக்கலம் நாடியுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.