கோலாலம்பூர், நவ 21- பெட்டாலிங் ஜெயா ஆப்டவுன் கோத்தா டாமன்சாரா
பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் 20 அங்காடிக் கடைகள்
சேதமடைந்தன.
இந்த தீவிபத்து தொடர்பில் இரவு மணி 8.34 அளவில் தங்களுக்கு தகவல்
கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
பேச்சாளர் கூறினார்.
இரவு 8.43 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த போது ஒரே
வரிசையில் அமைந்திருந்த அங்காடிக் கடைகள் 90 விழுக்காடு தீயில்
சேதமடைந்ததை தீயணைப்பு வீர ர்கள் கண்டனர் என்று அவர் சொன்னார்.
இந்த கடைகளுக்கு அருகில் ஜிம்னேஸியம் அமைந்துள்ள கட்டிடத்தின் 50
விழுக்காட்டுப் பகுதியும் இந்த தீவிபத்தில் சேதமுற்றதாகக் கூறிய அவர்,
தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் கட்டுப்பாட்டிற்குள்
கொண்டு வரப்பட்டது என்றார்.
இந்த தீயணைப்பு நடவடிக்கையில் சுங்கை பூலோ, கோத்தா அங்கிரிக்
மற்றும் டாமன்சாரா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு
வீரர்கள் ஈடுபட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.




