NATIONAL

சரவா மாநில அரசின் 1,360 கோடி வெள்ளி பட்ஜெட் தாக்கல்

20 நவம்பர் 2023, 7:07 AM
சரவா மாநில அரசின் 1,360 கோடி வெள்ளி பட்ஜெட் தாக்கல்

கூச்சிங், நவ 20- மிக அதிகத் தொகையை அதாவது 1,360 கோடி

வெள்ளியை உள்ளடக்கிய 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்

திட்டத்தை மாநில முதலமைச்சர் டான்ஸ்ரீ அபாங் ஜோஹரி துன் ஓப்போங்

இன்று தாக்கல் செய்தார்.

இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 1,150 கோடி

வெள்ளியுடன் ஒப்பிடுகையில் இது 18 விழுக்காடு அதிகமாகும்.

மாநிலத்தின் பொருளாதாரத்திற்குப் புத்துயிரளிப்பதற்கு ஏதுவாக

செலவினங்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த பெரிய

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக மாநில சட்டமன்றத்தில் இன்று

அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது

அபாங் ஜோஹாரி கூறினார்.

“அனைவருக்குமான மேம்பாடு- சுபிட்சம் நிறைந்த, நிலையான மற்றும்

ஐக்கிய சரவா உருவாக்கம்“ எனும் கருப்பொருளைக் கொண்ட இந்த வரவு

செலவுத் திட்டத்தில் மேம்பாட்டிற்கு 904 கோடி வெள்ளியும் நிர்வாகச்

செலவினங்களுக்கு 456 கோடி வெள்ளியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்வதற்காகச் சில முக்கியத்

துறைகளுக்கு இந்த பட்ஜெட் தொடர்ந்து நிதியளிக்கும். இதன் மூலம்

மாநில பொருளாதாரத்தை வளப்பமானதாகவும் நெகிழ்த்தன்மை

கொண்டதாகவும் உருவாக்க இயலும் என அவர் குறிப்பிட்டார்.

புநகர்ப் பகுதிகளின் மேம்பாட்டில் இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்ந்து

முக்கியத்துவம் வழங்கும் என்று அவர் மேலும் சொன்னார்.

ஒன்பது பிராந்திய மேம்பாட்டுத் துறைகளை அமைப்பதன் மூலம் இந்த

முயற்சி வலுப்படுத்தப்படும். எங்களின் அடிமட்ட அணுகுமுறையின்

வாயிலாக வட்டார சமூகத்திற்கு ஆக்கத் திறனளிப்பதில் இந்த துறைகள்

முக்கியப் பங்கினை ஆற்றும் என அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.