NATIONAL

227 மை ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களின் விண்ணப்பங்களுக்குச் சொக்சோ ஒப்புதல்! அமைச்சர் சிவகுமார் தகவல்

20 நவம்பர் 2023, 3:20 AM
227 மை ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்களின் விண்ணப்பங்களுக்குச் சொக்சோ ஒப்புதல்! அமைச்சர் சிவகுமார் தகவல்

புத்ரா ஜெயா நவ 20 - சொக்சோ நிறுவனத்தின் ஊழியர் காப்புறுதியை பெறுவதற்கு மலிவு விலை கட்டண நிறுவனமான மை ஏர்லைன்ஸ்ச் சேர்ந்த  533 ஊழியர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இதில் 277 விண்ணப்பங்களுக்கு சொக்சோ ஒப்புதல் அளித்துள்ளது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

மை ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் இருந்தாலும் அவர்கள் ஒதுக்கப்படாமல் இருப்பதை மனித வள அமைச்சு உறுதி செய்துள்ளது என்று அவர் சொன்னார்.

நேற்று புத்ராஜெயாவில் சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓட்டப்பந்தய மற்றும் சைக்கிளோட்டப் போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 9,000 க்கும் அதிகமான பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.