NATIONAL

சாலையோரத்தில் பிளாஸ்டிக் பொட்டலத்தில் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது

20 நவம்பர் 2023, 1:56 AM
சாலையோரத்தில் பிளாஸ்டிக் பொட்டலத்தில் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது

கோலாலம்பூர், நவ 20: பண்டார் சன்வே, சுபாங் ஜெயா வில் சாலையோரத்தில் பிளாஸ்டிக் பொட்டலத்தில் ஆண் குழந்தை ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது.

மதியம் 1.25 மணியளவில் பொதுமக்களால் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது என சுபாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமட் கூறினார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவ அதிகாரியின் முதல் கட்ட பரிசோதனையின் முடிவில் அக்குழந்தை சீரான நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதற்கு முன், குழந்தையை அருகில் உள்ள கிளினிக்கிற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றதாகவும், இப்போது மருத்துவமனையில்  அக்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 03-78627100 அல்லது 019-3559880 என்ற எண்ணில் விசாரணை அதிகாரி சூரியனா ஜக்காரியாவை அழைக்கவும் என வான் அஸ்லான் கேட்டுக் கொண்டார்.

குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் சந்தேகத்திற்குரிய நபரை அடையாளம் காண சிசிடிவி கேமரா இல்லை.

அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 317 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.