ECONOMY

தலைவர்களுக்கு உண்மையான சோதனை  சொல்வதைப் போன்று  செயல்படுவது என்கிறார் பிரதமர்

16 நவம்பர் 2023, 5:04 AM
தலைவர்களுக்கு உண்மையான சோதனை  சொல்வதைப் போன்று  செயல்படுவது என்கிறார் பிரதமர்

சான்பிரான்சிஸ்கோ, நவ.16- ஒரு தலைவனுக்கு உண்மையான சோதனை அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் போது நிகழ்கிறது, ஏனெனில் அவர்கள்  வாதங்களை மட்டும் கடைப்பிடிக்காமல், நீதி நியாயமாக நடக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

"ஏனென்றால், உங்கள் செயல்களால் நீங்கள் தீர்மானிக்க படுகிறீர்கள். மக்கள் உங்களுக்கு கால அவகாசம்  வழங்குகிறார்கள், ஆனால் நீங்கள்  அதில் சாதிக்கிறீர்களா  என்பதை அவர்கள்  கவனிக்கிறார்கள்.

"ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராடுவதன் மூலம் அதிகாரத்தை அடையும் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இது பொருந்தும்" என்றார் அன்வார்.

வாய் சவால்களில்  காலம் கடத்தாமல், உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை கான மக்கள் ஆசை படுகிறார்கள்.  ஆனால்  தலைவர்கள் தங்கள்  சேவையை  சரியாக வழங்காத போது  அவ நம்பிக்கை ஏற்படுகிறது.

நவம்பர் 14 முதல் 17 வரை 30 வது அபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்திற்கு கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 13) அன்வார் இங்கு வந்தார், மலேசியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ சந்திப்புக்கான தனது முதல் வருகையைக் குறிக்கும்.

அவருடன் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்   தொங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் அஜிஸ், தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் மற்றும் பிற மூத்த அரசு அதிகாரிகள் உள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.