ECONOMY

செலாயாங் பாசார் போரோங்கிற்கு அமைச்சர் சிவக்குமார் வருகை-  தொழிலாளர்களின் நலன்களை கேட்டறிந்தார்

15 நவம்பர் 2023, 9:12 AM
செலாயாங் பாசார் போரோங்கிற்கு அமைச்சர் சிவக்குமார் வருகை-  தொழிலாளர்களின் நலன்களை கேட்டறிந்தார்

கோலாலம்பூர் நவ 15-  செலாயாங் பசார் போரோங்கில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு  சொக்சோ மற்றும் இபிஎஃப் செலுத்தப்படுகிறதா என்பது தொடர்பில் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று அதிரடி நடவடிக்கையில் களம் இறங்கினார்.

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மனித வளதுறை, போலீஸ், கோலாலம்பூர் மாநகர் மன்றம், இபிஎஃப், சொக்சோ  அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

மலேசியாவில் ஒட்டுமொத்த காய்கறிகளின் ஏற்றுமதி தளமாக செலாயாங் பசார் போரோங் இயங்கி வருகிறது. செலாயாங் பசார் போரோங்கில் 480 முதலாளிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

காய்கறிகள், மீன்கள் மற்றும் பழங்களை வியாபாரம் செய்யும் இவர்களிடம் 5,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

அரசாங்கம் நிர்ணயம் செய்த 1,500 வெள்ளி அடிப்படை சம்பளம், சொக்சோ மற்றும் இபிஎஃப் முறையாக செலுத்தப்படுகிறதா என்பதை தெரிந்து நேரடியாக களம்  இறங்கியதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.