ECONOMY

காஸாவிலுள்ள அல்- ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்

15 நவம்பர் 2023, 8:57 AM
காஸாவிலுள்ள அல்- ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்

காஸா நகர், நவ 15-   காஸா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேலிய ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலிய டாங்கிகள்     மற்றும் புல்டோசர்கள் இப்போது மருத்துவமனை வளாகத்திற்குள் இருப்பதாக  அல்-ஷிஃபா மருத்துவமனையின் தீக்காயங்கள் துறையின் தலைவர் டாக்டர் அஹ்மத் மிகல்லாலத்தி கூறியதாக அல் ஜசீராவின் அறிக்கையை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

அல்-ஷிஃபா மருத்துவ வளாகத்தின் "ஒரு குறிப்பிட்ட பகுதியில்" இராணுவ நடவடிக்கையை தாங்கள்  தொடங்கியதாக இஸ்ரேலிய இராணுவம் முன்னதாக கூறியது.

செவ்வாய் இரவு மருத்துவமனையை முற்றுகையிடும் நோக்கம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு இஸ்ரேலிய இராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தாக காஸாவில் உள்ள சுகாதார அமைச்சு நேற்றிரவு தெரிவித்தது.    அல்-ஷிஃபா வளாகத்தில் உள்ள  மருத்துவ ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் புகலிடம் நாடிய மக்களின் உயிருக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளே  பொறுப்பு என பாலஸ்தீன சுகாதார அமைச்சர் மாய் அல்- கலிஃபா கூறியதாக அதிகாரப்பூர்வ வாஃபா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஆக்கிரமிப்பு இராணுவம் அல்-ஷிஃபா மருத்துவ வளாகத்தைத் தாக்கினால் நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பேரழிவு ஏற்படும் என்று அவர்  எச்சரித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.