ஷா ஆலம், நவ 15- அரசு ஊழியர்களிடையே ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநிலத்தில் உள்ள அனைத்து பொதுத் துறைகள் மற்றும் நிறுவனங்களும் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை உயர்நெறி மேலாண்மை தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வோராண்டும் மே, செப்டம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அமைச்சின் தலைமைச் செயலாளர், மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) உயர்நெறி மேலாண்மைப் பிரிவுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பப்பட வேண்டும் என்று மந்திரி புசார் கூறினார்.
அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உயர்நெறி மேலாண்மையின் அமலாக்கம் முறையாக உள்ளதை உறுதி செய்ய பொதுச் சேவைத் துறையின் சுற்றறிக்கை எண். 6/2013 க்கு ஏற்ப இந்த உயர்நெறி மேலாண்மை பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்
அரசு துறை அல்லது அல்லது நிறுவனம் எம்.ஏ.சி.சி.க்கு அறிக்கையை சமர்ப்பித்து, அதன் நகலை உயர்நெறிப் பிரிவு பிரிவு மற்றும் மாநிலச் செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பும். ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் ஊழல் எதிர்ப்புக் குழுக் கூட்டத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
ஒரு நிறுவனம் மட்டும் (அறிக்கையை) அனுப்பவில்லை, எனவே கொடுக்கப்பட்ட சுற்றறிக்கையின்படி அது எங்கும் (அறிக்கை) சிக்கிக் கொள்ளாது என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களிடையே ஊழல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் சிலாங்கூர் உயர்நெறிப் பிரிவின் பங்கு குறித்து சுங்கை ரமால் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஷாபி ஙா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த 2018 முதல் 2022 வரை அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட 314 ஊழல் புகார்கள் பதிவானது குறித்து கருத்து தெரிவித்த அமிருடின், சக ஊழியர்களின் நெருக்குதல் காரணமாக அவர்கள் இத்தகைய ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டது எம்.ஏ.சி.சி. விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று விளக்கினார்.








