ஷா ஆலம், நவ 15: வேலை செய்யும் பெண்களுக்கான குழந்தை பராமரிப்பு ஊக்கத்தொகை நவம்பர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு நாட்களில் சாதகமான வரவேற்பைப் பெற்றது.
செலங்கா செயலி மூலம் உருவாக்கப்பட்ட மாமா கெர்ஜா திட்டமானது 5,000 விண்ணப்பங்கள் என்ற இலக்கை எட்டிய பிறகு தற்போது மூடப்பட்டுள்ளதாகப் பெண்கள் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.
"ஏற்கனவே பதிவு செய்தவர்கள் விண்ணப்பித்த 14 முதல் 21 நாட்களுக்குள் அவர்களின் விண்ணப்பங்களின் முடிவைப் பார்க்கலாம்" என்று அன்ஃபால் சஃபாரி சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
ஏற்கனவே உள்ள வாக்குறுதிகளை முதலில் செலுத்த விரும்புவதால், மாநில அரசு ஒதுக்கீட்டின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பவில்லை என தாமான் டெம்ப்ளரின் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
கடந்த மாதம், சிலாங்கூர் அரசாங்கம் பணிபுரியும் பெண்களின் செலவைக் குறைக்க குழந்தை பராமரிப்பு ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது மூலம் மாநிலம் முழுவதும் 5,000 பெண்கள் பயனடைந்தனர்.
நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கிய மாமாகெர்ஜா இத்திட்டம், கடந்த ஆகஸ்ட் மாதம் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய ஒற்றுமை அரசாங்கத்தின் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
RM5 மில்லியன் ஒதுக்கப்பட்ட இத் திட்டத்திற்குக் குடும்ப வருமானம் RM8,000க்கு மிகாமல் 12 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளைக் கொண்ட பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் மற்றும் விண்ணப்பித்த 14 நாட்களுக்குப் பிறகு உதவி வழங்கப்படும்.
பிற தகுதித் தேவைகள் பின்வருமாறு:
- வேலை மற்றும் சுயதொழில் செய்யும் பெண்கள்
- சிலாங்கூரில் பிறந்த அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிலாங்கூரில் வசிக்கும் பெண்கள்
- சிலாங்கூரில் வாக்காளர்கள்
- RM8,000 மற்றும் அதற்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்டவர்கள்.
- உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) கணக்கு அல்லது ஊழியர் சேமநிதி வாரியம் (EPF) பங்களிப்பு உள்ள பெண்கள்
- அசோ பிந்தார், பிங்காஸ் மற்றும் துனாஸ் உதவி பெறாதவர்கள் இந்த உதவி திட்டத்தில் பயனடைவர்.








