ஷா ஆலம், நவ. 15: அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் கோலா லங்காட் நகராண்மை கழகம் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள இரண்டு இடங்களில் இரண்டு மணிநேர வாகன நிறுத்துமிடங்களை ஏற்பாடு செய்யவுள்ளது.
இச்சேவை மேபேங்க் (முன்) ஜாலான் சுல்தான் அப்துல் சமட் மற்றும் ஜாலான் செமர்லாங் 2 ஆகிய இடங்களில் செயல்படுத்தப்படும் என்று கோலா லங்காட் நகராண்மை கழகம் அறிவித்தது.
"வாகனம் நிறுத்தும் நேர வரம்பு இரண்டு மணிநேரம் மட்டுமே மற்றும் 30 நிமிடங்களுக்கு 50 சென்ட் கட்டணம்" என்று தெரிவிக்கப்பட்டது.
ஷா ஆலம் மாநகராட்சி, சுபாங் ஜெயா மாநகராட்சி, பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மற்றும் காஜாங் நகராண்மை கழகம் ஆகியவை இரண்டு மணிநேர வாகன நிறுத்தம் சேவையைச் செயல்படுத்தி வருகின்றன.








