ECONOMY

சொத்துடைமை, கோலாலம்பூரின் நீடித்த மேம்பாடு மீது மக்களவையில் இன்று விவாதம்

15 நவம்பர் 2023, 4:03 AM
சொத்துடைமை, கோலாலம்பூரின் நீடித்த மேம்பாடு மீது மக்களவையில் இன்று விவாதம்

கோலாலம்பூர், நவ 15- விற்கப்படாத சொத்துகள் மற்றும் மாநகரின் தொடர்ச்சியான வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்களுக்கு இன்றைய மக்களவைக் கூட்டத் தொடரில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

சொத்துகளின் மதிப்பும் மக்களின் வாங்கும் சக்தியும் இணையானதாக இல்லாத காரணத்தால் சொத்துகள் விற்கப்படாத விவகாரத்திற்கு தீர்வு காண அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து லிபரான்  தொகுதி தேசிய முன்னணி உறுப்பினர் டத்தோ சுஹைமி நாசீர் கேள்வியெழுப்புவார் என்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இன்றைய கூட்ட நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று காலை 10.00 மணிக்கு நாடாளுமன்றம்  கூடும்போது ஊராட்சி மன்ற  மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் இந்த கேள்வியை டத்தோ சுஹைமி முன்வைப்பார்.

கோலாலம்பூர் மாநகரின் தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் குடியிருப்பு பிரச்சனைக்கு தீர்வு காண எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பாலிக் பூலாவ் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் டத்தோ முகமது பக்தியார் வான் சிக் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் கேள்வியெழுப்புவார்.

சீனி, முட்டை, சமையல் எண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறை மற்றும் அப்பொருள்களின் விலையை உற்பத்தியாளர்களும் சில்லரை வியாபாரிகளும் அதிகரிப்பதை தடுப்பதற்கான முன்னெடுப்புகள் குறித்து டுங்குன் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் வான் ஹசான் வான்  முகமது ரம்லி இடைக்கால உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சரிடம் வினவுவார்.

மலேசிய ஊடக மன்றத்தை அமைக்கும் திட்டத்தின் ஆகக்கடைசி நிலவரம் குறித்து குளுவாங் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் வோங் சூ கிய் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சரிடம் கேள்வியெழுப்புவார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.