NATIONAL

தீபாவளியன்று நேர்ந்த துயரம்- விபத்துக்குள்ளான கார் தீப்பற்றியதில் மூன்று இளைஞர்கள் மரணம்

14 நவம்பர் 2023, 9:00 AM
தீபாவளியன்று நேர்ந்த துயரம்- விபத்துக்குள்ளான கார் தீப்பற்றியதில் மூன்று இளைஞர்கள் மரணம்

ஈப்போ, நவ 14 - பாட்டி வீட்டிற்கு பலகாரங்களைக் கொடுக்கச் சென்ற

மூன்று இளைஞர்கள் இங்குள்ள பெர்ச்சாம் தொழில்பேட்டைப் பகுதியில்

நேற்று மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்றிரவு 8.00 மணியளவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் அம்மூவரும்

பயணம் செய்த புரோட்டோன் பெர்டானா குப்பை லோரியுடன் மோதி

தீப்பற்றிக் கொண்டது. அதில் பயணம் செய்த எம். கிருஷ்ணா (வயது 20),

அவரின் தம்பி எம்.பவிலேஷ் (வயது 16) மற்றும் என்.கே. வர்மன் (வயது

16) ஆகியோரும் கருகி மாண்டனர்.

தஞ்சோங் ரம்புத்தானிலிருந்து வந்து கொண்டிருந்த அந்த கார்

வளைவொன்றில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த குப்பை லோரியுடன்

மோதியது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்த தாக ஈப்போ

மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யாஹ்யா ஹசான் கூறினார்.

லோரியின் அடியில் சிக்கிக் கொண்ட அந்த காரில் திடீரன தீப்பற்றியதாகக்

கூறிய அவர், காரிலிருந்த அனைவரும் தீயில் கருகி மாண்டனர் என்றார்.

லோரி ஓட்டுநரும் அதில் பயணம் செய்த நான்கு பணியாளர்களும்

காயமின்றி உயிர்த்தப்பியதாக அவர் மேலும் சொன்னார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.