NATIONAL

அமைச்சர் சிவகுமார் தலைமையில் மனிதவள அமைச்சின் தீபாவளி உபசரிப்பு

14 நவம்பர் 2023, 8:54 AM
அமைச்சர் சிவகுமார் தலைமையில் மனிதவள அமைச்சின் தீபாவளி உபசரிப்பு

புத்ரா ஜெயா நவ 13- தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் இன்று புத்ரா ஜெயா மேரியட் ஹோட்டலில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த தீபாவளி உபசரிப்பில் எச்.ஆர்.டி.கோர்ப்  நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் டாவூட்,  சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ அஸ்மான், மனித வள அமைச்சின் துணை தலைமை செயலாளர் டத்தோ நோரிசான், டேலாண்ட் கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி தோமஸ், நியோஸ் எனப்படும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கழகத்தின் தலைவர் அயோப்  உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் சார்பில்   சொக்சோ சந்தாதாரர்களுக்கு இழப்பீட்டு தொகையும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது.

நிதியை பெற்றுக் கொண்டவர்கள் மனித வள அமைச்சர் சிவகுமார் மற்றும் சொக்சோவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

நாட்டில் புகழ்பெற்ற பாடகர் சந்தேஸ் பாடல்களைப் பாடி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.