ஷா ஆலம், நவ 14: இன்று பிற்பகல் 3 மணி வரை சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.
இதே வானிலைதான் நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மற்றும் பேராக்,
கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களிலும் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம்
மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது
அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள்
வழங்கப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால
எச்சரிக்கை ஆகும்.
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள்
http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.




