கோலாலம்பூர், நவ 10- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் சனி
மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச டோல் கட்டண சலுகையை
வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் எல்லைகளில் உள்ள சுல்தான் இஸ்கந்தார் கட்டிட டோல் சாவடி
மற்றும் ஜோகூர் தஞ்சோங் குப்பாங் டோல் சாவடி நீங்கலாக நாட்டிலுள்ள
அனைத்து டோல் சாவடிகளிலும் அனைத்து அனைத்துப் பிரிவு
வாகனங்களுக்கும் இந்த டோல் கட்டண விலக்கு வழங்கப்படுவதாக
பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி
கூறினார்.
இந்த இலவச டோல் கட்டணச் சலுகை நாளை நவம்பர் 11ஆம் தேதி
(சனிக்கிழமை) பின்னிரவு 12.01 மணி தொடங்கி 12ஆம் தேதி
(ஞாயிற்றுக்கிழமை) இரவு மணி 11.59 வரை அமலில் இருக்கும் என அவர்
சொன்னார்.
அனைத்து நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களுடன் பொதுப்பணி
அமைச்சு நடத்திய சந்திப்பின் வாயிலாக இந்த இலவச டோல் கட்டண
சலுகையை வழங்க ஒப்பதல் அளிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
தீபாவளியைக் கொண்டாடும் இந்து சமயத்தைச் சேர்ந்த இந்தியர்களில்
மகிழச்சியில் அனைத்து மலேசியர்களும் பங்கு கொள்ளும் வகையில்
இந்த சலுகை வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.








