NATIONAL

மாநகரில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சாலைத் தடுப்பு சோதனையில் 1,146 குற்றப்பதிவுகள் வெளியீடு

9 நவம்பர் 2023, 7:01 AM
மாநகரில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சாலைத் தடுப்பு சோதனையில் 1,146 குற்றப்பதிவுகள் வெளியீடு

கோலாலம்பூர், நவ 9- கோலாலம்பூர் போக்குவரத்து போலீசார் மற்றும்

இதர அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் சாலை போக்குவரத்து இலாகா

நேற்று நடத்திய ஓப் பாத்தோ சாலை தடுப்புச் சோதனையில் 1,146

குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.

தலைநகர், பத்து டோல் சாவடி மற்றும் காஜாங், சுங்கை ராமால் டோல்

சாவடியில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சாலை போக்குவரத்து

இலாகாவின் அமலாக்கப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ லோக்மான்

ஜமான் கூறினார்.

நேற்றிரவு 8.30 மணி தொடங்கி நள்ளிரவு 12.01 மணி வரை

மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் பத்து டோல் சாவடியில் 2,5ஃ6

வாகனங்கள் சோதனையிடப்பட்டதாகக் கூறிய அவர், பத்து டோல்

சாவடியில் பல்வேறு குற்றங்களுக்காக 615 குற்றப்பதிவுகள்

வெளியிடப்பட்டன என்றார்.

வாகனமோட்டும் லைசென்ஸ் இல்லாதது, சாலை வரி மற்றும் காப்புறுதி

காலாவதியானது ஆகியவற்றோடு வாகன பதிவு எண் தொடர்பான

குற்றங்களுக்கும் சம்மன்கள் வழங்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

இதனிடையே, கடந்த நவம்பர் 1 முதல் 7 வரை நாடு முழுவதும்

மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 128,489 வாகனங்களை ஜே.பி.ஜே.

சோதனையிட்டதாக அவர் தெரிவித்தார்.

சாலை விதிகளை மீறிய பல்வேறு குற்றங்களுக்காக 25,526 பேருக்கு

குற்றப்பதிவுகள் வெளியிட்டப்பட்டன. சாலை விதிகளைப் கடைபிடிப்பதில்

வாகனமோட்டிகள் மத்தியில் இன்னும் அலட்சியப் போக்கு நிலவுவதை

இந்த எண்ணிக்கை காட்டுகிறது என்றார் அவர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.