NATIONAL

நான்கு குற்றச்சாட்டுகளிலும் சைட் சாடிக் குற்றவாளியே- நீதிமன்றம் தீர்ப்பு

9 நவம்பர் 2023, 6:55 AM
நான்கு குற்றச்சாட்டுகளிலும் சைட் சாடிக் குற்றவாளியே- நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர், நவ 9 - அங்காத்தான் பெர்சத்து அனாக் மூடா (ஆர்மாடா)

அமைப்புகுச் சொந்தமான நிதியை நம்பிக்கை மோசடி செய்வதற்கு

உடந்தையாக இருந்தது, சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும்

சட்டவிரோதப் பணபரிமாற்றம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளில்

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல்லா

குற்றவாளி என இங்குள்ள உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் எதிர்த்தரப்பு நியாயமான

சந்தேகங்களை எழுப்பத் தவறியதைத் தொடர்ந்து நீதிபதி டத்தோ

அஸ்ஹார் அப்துல் ஹமிட் இந்த தீர்ப்பை வழங்கினார்.

இவ்வழக்கின் இறுதியில் எதிர்த்தரப்பு நியாயமான சந்தேகங்களை எழுப்பத்

தவறி விட்டது. அதே சமயம், குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கிடமின்றி

நிரூபிப்பதில் அரசுத் தரப்பு வெற்றி கண்டது என்று அவர் தனது தீர்ப்பில்

கூறினார்.

ஆகவே, குற்றஞ்சாட்டப்பட்டவர் நான்கு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி

என உறுதி செய்யப்படுகிறது என நீதிபதி குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.