ஷா ஆலம், நவ 9: ;நாளை வெள்ளிக்கிழமை 10 ஆம் தேதி 3.00 மணி தொடங்கி சிலாங்கூர் மாநில பட்ஜெட் 2024 யை சட்டமன்றத்தில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தாக்கல் செய்வதை மக்கள் நேரடியாக காணும் வகையில் .மீடியா சிலாங்கூர் முகநூல் மற்றும் சிலாங்கூர் டிவி மூலம் நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த செய்திகள் சிலாங்கூர் கினி மலாய் இதழிலும் மறுநாள் வெளியிடப்படும் அதே வேளையில் ஆங்கிலம், சீனம் மற்றும் தமிழ் பதிப்புகள் இணையம் வழி வெளியிடப்படும்.








