NATIONAL

அனைத்துலகச் சந்தைகளில் உள்ளூர் தொழில்முனைவோர் ஊடுருவ வேண்டும்- மாட்ரேட் கோரிக்கை

9 நவம்பர் 2023, 3:14 AM
அனைத்துலகச் சந்தைகளில் உள்ளூர் தொழில்முனைவோர் ஊடுருவ வேண்டும்- மாட்ரேட் கோரிக்கை

ஜொகூர் பாரு, நவ 9 -உள்ளூர் தொழில்முனைவோர், குறிப்பாகக் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளில் ஊடுருவும்  தைரியத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவை உள்நாட்டு சந்தையை மட்டும் நம்பி இருக்கக்கூடாது.

உலக அளவில் 49 வர்த்தக அலுவலகங்களைக் கொண்ட மாட்ரேட், உள்ளூர் தொழில் முனைவோர் அனைத்துலகச் சந்தையில்   ஊடுருவுவதற்கு உதவத் தயாராக உள்ளது என்று மலேசியா வெளி வர்த்தக மேம்பாட்டுக் கழகத்தின் (மாட்ரெட்) துணைத் தலைமைச் செயல் அதிகாரி (ஏற்றுமதியாளர் மேம்பாடு) அபு பக்கர் யூசுப் கூறினார்.

சிறு மற்றும் நடுந்தர தொழில் நிறுவனங்கள்  உட்பட பல்வேறு உள்ளூர் நிறுவனங்கள் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்தவும் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்கவும் உதவுகின்றன என்று அவர் சொன்னார்.

இந்த ஆண்டு உலகப் பொருளாதாரச் செயல்பாடு சற்று மெதுவாக இருக்கும் என்பதால்  தொழில்முனைவோர் உள்நாட்டுச் சந்தையை மட்டுமே நம்பியிருக்க முடியாது என அவர் கூறினார்.

நமது  உள்நாட்டு சந்தை சிறியது என்பதோடு   போட்டியும் மிகவும் தீவிரமானது. இது தவிர பல உற்பத்தியாளர்கள் ஒரே தயாரிப்புகளை உற்பத்தி செய்து தங்களுக்குள் போட்டியிடுகின்றனர். எனவே, பெரிய  சந்தைகளுக்கு ஏன் விரிவாக்கக்கூடாது? என அவர் கேள்வியெழுப்பினார்.

நேற்று இங்கு நடைபெற்ற ஜொகூர் ஏற்றுமதி தின நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு  கூறினார்.

மாநிலத்தில் அனுசரிக்கப்படும் ஜொகூர் ஏற்றுமதி நாள் 2023 உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் சந்தையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அபு பக்கர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.