NATIONAL

சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி பல்வேறு இன மக்களை ஒன்றிணைக்கும் சரவாக் கலாச்சார கிராமத்திற்கு வருகை

8 நவம்பர் 2023, 9:33 AM
சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி பல்வேறு இன மக்களை ஒன்றிணைக்கும் சரவாக் கலாச்சார கிராமத்திற்கு வருகை

ஷா ஆலம், நவ. 8: சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராஷிகின், பல்வேறு இன மக்களை ஒன்றிணைக்கும் சரவாக் கலாச்சார கிராமத்திற்கு வருகை புரிந்தார்.

நேற்று சாந்துபோங்கிற்கு வருகை புரிந்த தெங்கு பெர்மைசூரி அவர்களைச் சரவாக் மாநிலச் சட்டப் பேரவையின் சபாநாயகரின் மனைவி டத்தோ பாத்திமா இஸ்கண்டார் மற்றும் சரவாக் துணைப் பிரதமரின் மனைவி டத்தின் அமர் என் ஓங் சியோக் ஈயன் ஆகியோர் வரவேற்றனர்.

தெங்கு பெர்மைசூரி அவர்கள் பிடாயு, இபான், ஒராங் உலு, மெலனாவ், மலாய்க்காரர்கள் மற்றும் சீனர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என சிலாங்கூர் அரச அலுவலகம் முகநூல் வழி தெரிவித்தது.

"அங்கு இபான் சமூகத்தின் பாரம்பரிய உணவான குய்ஹ் சாப்பை உருவாக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல், இபான் நடனம், சுபிட்டைக் கையாளும் முறையைக் கற்கவும் மற்றும் புவா கும்பு தயாரிப்பதைக் காணவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது" என்று அறிக்கை.கூறுகிறது.

மேலும், அங்கு நகாஜத் லெசுங் கலாச்சார நிகழ்ச்சியும் படைக்கப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.