ஷா ஆலம், நவ 8: எதிர்வரும் டிசம்பரில் சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி (SIBF) 2023 இல் ஒவ்வொரு நாளும் ஒன்பது அதிர்ஷ்டசாலி வருகையாளர்களுக்கு RM500 ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
"இந்நிகழ்வு டிசம்பர் 1 முதல் 10 வரை ஷா ஆலம் சிட்டி கவுன்சில் கன்வென்ஷன் சென்டரில் (MBSA) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
"இந்நிகழ்வில் அதிர்ஷ்டக் குழுக்கு, புத்தக விற்பனை, தள்ளுபடிகள், நடவடிக்கைகள் மற்றும் பல நிகழ்வுகள் இடம்பெறும்! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்," என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி சிலாங்கூர் புத்தகத் விழாவின் தொடர்ச்சியாக 16 ஆண்டுகளாக மாநில அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த ஆண்டு, துருக்கி, வட மாசிடோனியா, தென் கொரியா மற்றும் எகிப்து உள்ளிட்ட 225 உள்ளூர் மற்றும் சர்வதேசக் கண்காட்சி யாளர்கள் புத்தகக் கண்காட்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி 2022யில் 200,000க்கும் அதிகமானவர்கள் வருகையைப் புரிந்து, மொத்த விற்பனையின் மதிப்பு RM5 மில்லியனுக்கும் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டது.




