NATIONAL

நெகிரி செம்பிலான் போலீசார் வெ.500,000 மதிப்புள்ள போதைப் பொருளை அழித்தனர்

8 நவம்பர் 2023, 3:56 AM
நெகிரி செம்பிலான் போலீசார் வெ.500,000 மதிப்புள்ள போதைப் பொருளை அழித்தனர்

சிரம்பான், நவ 8 - மாநிலம் முழுவதும் கடந்த 2012 முதல் 2022 வரை கைப்பற்றப்பட்ட 499,611.23 வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள்களை நெகிரி செம்பிலான் போலீஸார் அழித்தனர்.

நீதிமன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மொத்தம் 36,445.41 கிராம் ஹெராயின், மெத்தம்பெத்தமைன், கஞ்சா, 47.3 லிட்டர் கெட்டமின், 586 கிலோ கெத்தும் இலைகள் மற்றும் 2,326 லிட்டர் கெத்தும் நீர் ஆகிய போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டதாக  மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அகமது  ஜாஃபிர் முகமது யூசோப் தெரிவித்தார்.

இந்த வழக்கு சாட்சிப் பொருட்கள் விசாரணைகள் முடிந்த பிறகு அழிக்கப்பட்டன மற்றும் இன்னும் மாவட்டங்கள் முழுவதும் போதைப்பொருள் கிடங்குகளில்  வைக்கப்பட்டுள்ளன  என்று அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

1952ஆம் ஆண்டு அபாயகர  போதைப்பொருள் சட்டத்தின் 39பி, 39ஏ, 39ஏ (2), 39ஏ (1) மற்றும் 6பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போதைப்பொருள் குற்றங்களுக்காக மொத்தம் 5,732 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டன.

இதற்கிடையில், மாநிலத்தில் போதைப்பொருள் குற்றங்களைக் குறைப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பையும்  தாங்கள் நாடுவதாக அவர் அகமது ஜாஃபிர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.