NATIONAL

மலேசிய கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் சரவாக் கிளைக்கு அரசத் தம்பதியினர் வருகை

8 நவம்பர் 2023, 2:57 AM
மலேசிய கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் சரவாக் கிளைக்கு அரசத் தம்பதியினர் வருகை

ஷா ஆலம், நவ. 8: சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மலேசிய கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் சரவாக் கிளைக்கு வருகை புரிந்தார்.

மேலும், அவருடன் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராஷிகின் மற்றும் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா ஆகியோரும் வருகை புரிந்தனர்.

"அங்கு கைவினைப்பொருட்கள் மற்றும் சரவாக் நெசவு முறைகள் பற்றிய செயல்விளக்கக் கண்காட்சி அவர்களுக்குக் காட்டப்பட்டது.

"அதுமட்டுமில்லாமல், சுல்தான் ஷராஃபுடின், தெங்கு பெர்மைசூரி மற்றும் தெங்கு அமீர் ஆகியோருக்கும் சரவாக்கின் நெசவு தயாரிப்புகள் பற்றிய சுருக்கமான விளக்கமளிக்கப்பட்டது" என்று சிலாங்கூர் ராயல் அலுவலகம் முகநூலில் தெரிவித்தது.

அரசத் தம்பதியினர் சரவாக்கிற்கு நான்கு நாள் உத்தியோகப் பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.