NATIONAL

நவம்பர் 10ஆம் தேதி சிலாங்கூர் பட்ஜெட் 2024 தாக்கல்

8 நவம்பர் 2023, 12:47 AM
நவம்பர் 10ஆம் தேதி சிலாங்கூர் பட்ஜெட் 2024 தாக்கல்

ஷா ஆலம், நவ 8: நவம்பர் 10ஆம் தேதி சிலாங்கூர் மாநில சட்டமன்ற (டிஎன்எஸ்) அமர்வில் சிலாங்கூர் பட்ஜெட் 2024 ஐ டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தாக்கல் செய்ய உள்ளார்.

மீடியா சிலாங்கூர் முகநூல் மற்றும் சிலாங்கூர் டிவி மூலம்

விளக்கக்காட்சியின் நேரடி ஒளிபரப்பை பொதுமக்கள் காணலாம். மேலும், மலாய் மொழியில் நாளிதழ் மறுநாள் வெளியிடப்படும் அதே வேளையில் ஆங்கிலம், சீனம் மற்றும் தமிழ் பதிப்புகள் இணையம் வழி வெளியிடப்படும்.

சிலாங்கூர் மாநில கருவூலத்தின் அதிகாரப்பூர்வப் போர்டல் மூலம்

நடத்தப்படும் கேள்வி அங்கத்தில் பங்கேற்று பட்ஜெட் திட்டமிடலில்

பொதுமக்கள் ஈடுபடலாம்.

பட்ஜெட் தாக்கல் அமர்வைத் தொடர்ந்து சட்டமன்ற  கூட்டம் நவம்பர் 24 வரை இரண்டு வாரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் லாவ் வெங் சான் கூறினார்.

அவமரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் நேர்த்தியான முறையில் விவாதம் நடத்த மேன்மைதங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்கள் உத்தரவிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.