NATIONAL

மைஜோப் ``MyFutureJobs`` போர்டல் மூலம் 954,520 நபர்களுக்குப் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு

7 நவம்பர் 2023, 9:40 AM
மைஜோப் ``MyFutureJobs`` போர்டல் மூலம் 954,520 நபர்களுக்குப் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு

கோம்பாக், நவ 7: நாடு முழுவதும் 2020ஆம் ஆண்டு முதல் மொத்தம் 954,520 நபர்கள் மைஜோப் ``MyFutureJobs`` போர்டல் மூலம் சமூகப் பாதுகாப்பு அமைப்பு (Perkeso) வழங்கிய பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

அக்டோபர் 19 வரை பதிவு செய்யப்பட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில் அவர்களில் 231,267 பேர் சிலாங்கூரில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதையும் காட்டுகிறது என மனித வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறினார்.

"இந்த போர்டல், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள், வேலையில்லாத தனிநபர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் மற்றும் புதிய வேலை தேடும் தொழிலாளர்களுக்கு உதவும் முயற்சிகளில் ஒன்றாகும்.

"இந்த அதிநவீன போர்டல், வேலை தேடுபவரின் தகுதிகள் மற்றும் திறன்களின் அடிப்படையில் வேலைகளை காட்டுவதில் உதவுகிறது," என்றார்.

இதற்கிடையில், அந்நிறுவனத்தில் வேலையைப் பெற்ற 111,326 மாணவர்களில் 33 சதவீதம் பேர் 2012 முதல் கடந்த ஆண்டு வரை தேசிய கட்டமைக்கப்பட்ட தொழில்துறை பயிற்சி (MySIP) திட்டத்தின் மூலம் தொழில்துறை பயிற்சி பெற்றதாகச் சிவகுமார் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மொத்தம் 501 நிறுவனங்கள் ``TalentCorp`` உடன் இணைந்து நடத்தப்படும் பள்ளிக்கல்வி முதல் வேலைவாய்ப்பு வரையிலான மாற்று தளம் திட்டத்தில் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.