ஷா ஆலம், நவ 7: இன்று மாலை 5 மணி வரை சிலாங்கூரில் உள்ள எட்டு
மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு
மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவை கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா
லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் ஆகும் என அந்நிறுவனம்
தெரிவித்துள்ளது.
இதே வானிலைதான் பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், திரங்கானு, பகாங், நெகிரி
செம்பிலான், மலாக்கா, ஜொகூர், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் சபா ஆகிய
மாநிலங்களிலும் நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம்
மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது
அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள்
வழங்கப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால
எச்சரிக்கை ஆகும்.
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள்
http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது
myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.




