NATIONAL

விளம்பர நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட தகவல் தொடர்புச் செலவுகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது

7 நவம்பர் 2023, 7:13 AM
விளம்பர நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட தகவல் தொடர்புச் செலவுகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், நவ. 7: விளம்பர நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட தகவல் தொடர்புச் செலவுகளுக்கான ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு RM100 மில்லியனாக நிதி அமைச்சகம் குறைத்துள்ளது.

2020 முதல் கடந்த ஆண்டு வரை, இந்நடவடிக்கைக்காக முந்தைய நிர்வாகத்தால் 700 மில்லியன் ரிங்கிட் செலவழிக்கப் பட்டதாகப் பிரதமர் விளக்கினார்.

"கடந்த இரண்டு நிர்வாகத்தால் அரசாங்கத்தின் திட்டங்கள் அனைத்து ஊடக தளங்களில் விளம்பரப்படுத்துவதற்காகச் சராசரியாக வருடத்திற்கு RM200 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.

"2024 மற்றும் அதற்கு அப்பால் அரசாங்க அறிவிப்புகளின் விளம்பரத்திற்கான செலவுகள் வருடத்திற்கு RM100 மில்லியனுக்கும் அதிகமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று நான் அறிவுறுத்துகிறேன், " என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இன்று நாடாளுமன்றத்தில் அமைச்சரின் கேள்வி நேரத்தின் போது பி பிரபாகரனின் (ஹரப்பான்-பத்து) கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

அரசாங்க கொள்கைகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களை இன்னும் பல அணுகுமுறைகள் மூலம் திறம்பட செயல்படுத்த முடியும் என்று தம்புன் நாடாளுமன்ற உறுப்பினர் நம்பிக்கை தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, பொதுமக்களுக்குத் துல்லியமாகத் தகவல்களைத் தெரிவிக்க, அரசாங்க ஊடகத் தளங்கள் உட்பட அனைத்து நிறுவனங்கள் மற்றும் துறைகளையும் அரசாங்கம் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.