NATIONAL

சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

7 நவம்பர் 2023, 6:16 AM
சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், நவ 7: இன்று மாலை 4 மணி வரை கோலாலம்பூர்

மற்றும் சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய

கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம்

(மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவை உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், கோலா லங்காட் மற்றும்

உலு லங்காட் ஆகிய மாவட்டங்களாகும் என அந்நிறுவனம்

தெரிவித்துள்ளது.

இதே வானிலைதான் கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங்,

நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மற்றும் சபா ஆகிய

மாநிலங்களிலும் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம்

மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது

அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள்

வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால

எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள்

http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.