NATIONAL

ஓப்ஸ் தாபிஸ் சோதனை நடவடிக்கையில் RM313,962.93 மதிப்பீட்டில் போதைப்பொருட்கள் பறிமுதல்

7 நவம்பர் 2023, 4:30 AM
ஓப்ஸ் தாபிஸ் சோதனை நடவடிக்கையில் RM313,962.93 மதிப்பீட்டில் போதைப்பொருட்கள் பறிமுதல்

கோத்தா பாரு, நவ 7 - அக்டோபர் 23 முதல் நேற்று வரை ஓப்ஸ் தாபிஸ் என்ற குறியீட்டுப் பெயரில் ஒருங்கிணைக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் RM313,962.93 மதிப்பீட்டில் பல்வேறு வகையான போதைப்பொருட்களை கிளந்தான் காவல்துறையினர் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையின் போது 16 முதல் 71 வயதுக்குட்பட்ட 811 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநிலக் காவல்துறை தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 799 ஆண்கள், 12 பெண்கள், 4 பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு உயர்கல்வி நிறுவன மாணவர் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

“அவர்கள் அனைவரும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952, ஆபத்தான மருந்துகள் (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) சட்டம் 1985 மற்றும் விஷச் சட்டம் 1952 ஆகியவற்றின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் யாபா மற்றும் எக்ஸ்டஸி மாத்திரைகள், சயாபு, ஹெராயின், கஞ்சா மற்றும் எம்.டி.எம்.ஏ ஆகியவை அடங்கும்.

மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களை 39,639 நபர்கள் பயன்படுத்த முடியும்.

போதைப் பொருட்களைத் தவிர, 500,343.01 ரிங்கிட் மதிப்புள்ள வாகனங்கள், ரொக்கம் மற்றும் நகைகள் போன்றவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் RM814,305.94 என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

``போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை 012-2087222 என்ற போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் அவசர தொலைபேசி மூலமாகவும் அல்லது 09-745 5555 என்ற கிளந்தான் காவல்துறை படைத் தலைமையகக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ தெரிவிக்க பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்``.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.