NATIONAL

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14ஆம் தேதி பதிவு இல்லாத விடுமுறை - அரசு இணக்கம்

7 நவம்பர் 2023, 4:28 AM
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14ஆம் தேதி பதிவு இல்லாத விடுமுறை - அரசு இணக்கம்

கோலாலம்பூர், நவ 7 - ஞாயிற்றுக்கிழமையன்று  வார விடுமுறையை அனுசரிக்கும்  மாநிலங்களைச் சேர்ந்த இந்து அரசு ஊழியர்கள் தீபாவளிக்காக நவம்பர் 13 ஆம் தேதி  திங்கட்கிழமை பெற வேண்டிய பதிவு இல்லாத  விடுப்பை செவ்வாய்க்கிழமை நவம்பர் 14ஆம் தேதி பெறுவதற்கு  அரசாங்கம்  இணக்கம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்படட  அதிகாரிகளின்   இணக்கத்தை பொறுத்து  இது அமைவதாக பொதுச் சேவைத்துறையின்  தலைமை இயக்குனர்  டத்தோ டாக்டர்  ஜூல்காப்ளி முகமது சைட் தெரிவித்தார்.  பதிவு இல்லாத  விடுமுறையை அனுமதிக்கப்பட்ட தினத்தில்  மட்டுமே எடுக்க முடியும். பதிவு இல்லாத  விடுமுறை,   பொது விடுமுறை   அல்லது  வார இறுதியில்  வருமானால் மறுநாளன்று அதனை  பெமுடியாது .

எனினும்   2023 ஆம் ஆண்டுக்கு  இதில் விதிவிலக்கு வழங்குவதற்கு   நவம்பர்  3ஆம் தேதி அரசாங்கம் இணக்கம் தெரிவித்தாக  பொதுச் சேவைத்துறையின்  செயலியில் நேற்று  பதிவேற்றம் செய்யப்பட்ட  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநில பொதுச் சேவைத்துறைகள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் ஊராட்சி மன்றங்களுக்கு   இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக   ஜூல்காப்ளி  தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.