NATIONAL

சிலாங்கூர் சுல்தான் மற்றும் தெங்கு பெர்மைசூரி ஆகியோர் சரவாக்கிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வப் பயணம்

6 நவம்பர் 2023, 9:33 AM
சிலாங்கூர் சுல்தான் மற்றும் தெங்கு பெர்மைசூரி ஆகியோர் சரவாக்கிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வப் பயணம்

கூச்சிங், நவ 6 - நேற்று சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா

மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஆகியோர் சரவாக் ரேகாத்தா-கூச்சிங்

வாட்டர் ஃபிரண்ட் திருவிழா 2023 யை முன்னிட்டு சரவாக் ஆற்றின் கரையில்

நடைபெற்ற  படகுப் போட்டியைக் கண்டுகளித்தனர்.சரவாக்கிற்கு நான்கு நாள் உத்தியோக பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அரச

தம்பதியினரை மாலை 4 மணியளவில் சரவாக் முதல்வர் டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி

அபாங் ஓபெங் வரவேற்றார்.இன்று, அவர்கள் மலேசிய கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் சரவாக்

கிளை, ஃபோர்ட் மகேரிதா மற்றும் ஜுமானி பெவிலியன் ஆகியவற்றைப் பார்வையிட

உள்ளனர். பின்னர் மாலையில், சரவாக் மாநிலச் சட்டப் பேரவையில் நடைபெறும்

அரசு விருந்தில் பங்கேற்க உள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) காலை 11.30 மணிக்குக் கூச்சிங் சர்வதேச விமான

நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு விமானத்தில் சுல்தான் ஷராஃபுடின்

மற்றும் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் ஆகியோர்  திரும்புவார்கள்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.