NATIONAL

மதம்,  அரண்மனை மற்றும் இனம் (3R) விவகாரங்களை எழுப்புவதை கண்காணிக்க ஒரு சிறப்புப் பிரிவு - கெஅடிலான்

6 நவம்பர் 2023, 8:56 AM
மதம்,  அரண்மனை மற்றும் இனம் (3R)  விவகாரங்களை எழுப்புவதை கண்காணிக்க  ஒரு சிறப்புப் பிரிவு - கெஅடிலான்

ஈப்போ, நவ 6 - சமூக ஊடகங்களில் மதம்,  அரண்மனை  மற்றும் இனம் (3R) தொடர்பான சீண்டும் மற்றும்  புண்படுத்தும் விவகாரங்களைக் கண்காணிக்க உதவும் வகையில் ஒரு சிறப்புப் பிரிவை அமைக்க பார்ட்டி கெடிலன் ரக்யாட் (கெடிலான்) இளைஞர்கள் பிரிவு திட்டமிட்டுள்ளது.

கெஅடிலான் இளைஞர் மாநாட்டின் போது முன்வைக்கப்பட்ட முன் மொழிவுகளில்

இதுவும் ஒன்று என்றும், செயல்படுத்தும் முறை குறித்து ஆய்வு செய்யப்படும்

என்றும் அதன் தலைவர் ஆடாம் அட்லி அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

மேலும், புதிய உறுப்பினர்களுக்கு கட்சியின் கொள்கைகள் மற்றும் இலட்சியவாதம் பற்றிய புரிதலை வலுப்படுத்த, கெ அடிலான் இளைஞர்கள் வழக்கமான விளக்கங்கள் வழங்குவதாகவும் அவர் கூறினார்.

"கெ அடிலானில் உறுப்பினராகும் எவரும் கட்சியின் கொள்கைகளை

புரிந்து கொள்வதையும், அவற்றை சமூகத்திற்கு சிறப்பாக விளக்க முடியும்

என்பதையும் இது உறுதி செய்யும்" என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.