NATIONAL

பந்திங், கிளனாங் பாரு மாரியம்மன் ஆலயத்திற்கு 50,000 வெள்ளி மானியம்- அமைச்சர் சிவகுமார் வழங்கினார்

6 நவம்பர் 2023, 8:25 AM
பந்திங், கிளனாங் பாரு மாரியம்மன் ஆலயத்திற்கு 50,000 வெள்ளி மானியம்- அமைச்சர் சிவகுமார் வழங்கினார்

கோலாலம்பூர் நவ 6- பந்திங், கிளனாங் பாருவில் 115 ஆண்டுகளுக்கு மேலாக அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகம் 1 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியில் புதிய ரதத்தை வாங்கியுள்ளது.

கடந்த ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்ற ஆலயத் திருவிழாவில் கலந்து கொண்ட மனித வள அமைச்சர் வ சிவகுமார், ஆலய நிர்வாகம் புதிதாக வாங்கியிருக்கும் புதிய ரதத்திற்கு  50,000 வெள்ளியை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் இன்று கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைச்சர் சிவகுமார் 50,000 வெள்ளிக்கான மாதிரி காசோலையை ஆலயத் தலைவர்

ரெங்கநாதன் ஏழுமலையிடம் நேரடியாக ஒப்படைத்தார்.

இந்த தருணத்தில் மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஆலயத் தலைவர் ரெங்கநாதன் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.