ECONOMY

கல்வியமைச்சரை சமூக ஊடகம் வழி மிரட்டிய ஆடவன் கைது

5 நவம்பர் 2023, 2:50 AM
கல்வியமைச்சரை சமூக ஊடகம் வழி மிரட்டிய ஆடவன் கைது

கோலாலம்பூர், நவ 5- கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக்கிற்கு எதிராக சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல் விடுத்ததாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கைதான அந்த 28 வயது நபர் @syahmisufi8 என்ற எக்ஸ் கணக்கின் உரிமையாளராவோ அதன்   நடத்துநராகவோ இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமது ஜைன் கூறினார்.

அந்த சந்தேக நபர் தலைநகர் ஸ்தாப்பாக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக நான்கு போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சொன்னார். வழக்கின் விசாரணைக்கு இடையூறாக எந்த ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது, ​​குறிப்பாக பொதுப் பாதுகாப்பு என  வரும் போது முக்கியமான விஷயங்களில் விழிப்புடனும் கவனமாகவும் இருக்குமாறு பொதுமக்களை காவல்துறை நினைவூட்டுகிறது என்று சுஹைலி  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபர் திங்கள்கிழமை (நவம்பர் 6) வரை மூன்று நாட்களுக்கு  விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.