ECONOMY

மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் பத்துகேவ்ஸில்  மாபெரும்  ஜெலாஜா மடாணி நிகழ்வு

3 நவம்பர் 2023, 7:53 AM
மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் பத்துகேவ்ஸில்  மாபெரும்  ஜெலாஜா மடாணி நிகழ்வு

புத்ரா ஜெயா, நவ 3- மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பத்து கேவ்ஸ், கம்போங் மிலாயு வீரா டாமாய், சமூக மண்டபத்தில்  காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஜெலாஜா மடாணி  நிகழ்வு மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வை மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு உட்பட பல முக்கிய பிரமுகர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp, சொக்சோ, டேலாண்ட் கோர்ப், நியோஸ், மனிதவள மேம்பாட்டு கழகம் போன்ற நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கு பெறுகிறது.

வேலை வாய்ப்பு கண்காட்சி, இலவச மருத்துவ பரிசோதனை, தொழில் திறன் பயிற்சிகள் இந்த நிகழ்வில் இடம் பெற்றுள்ளது.

பத்துகேவ்ஸ் வட்டாரத்தில் உள்ள மக்கள் இந்த நிகழ்வில் திரளாக கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.