NATIONAL

மைஏர்லைன்  விமான நிறுவன ஊழியர்கள்  நலன் காக்கப்படும்! அமைச்சர் சிவகுமார் உறுதி

2 நவம்பர் 2023, 9:31 AM
மைஏர்லைன்  விமான நிறுவன ஊழியர்கள்  நலன் காக்கப்படும்! அமைச்சர் சிவகுமார் உறுதி

கோலாலம்பூர், நவ. 2- திடீரென விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட மைஏர்லைன் ஊழியர்கள் உரிமைகோரல்களைத் தாக்கல் செய்ய அழைக்கப்படுகிறார்கள் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று தெரிவித்தார்.

கடந்த அ க்டோபர் 12ஆம் தேதி முதல் விமானச் செயல்பாடுகளை நிறுத்திவைத்துள்ள மைஏர்லைன் விமானத்தின் கீழ் ஊழியர்கள் எதிர்கொள்ளும் நிலைமை குறித்து மனிதவள அமைச்சு  கவலை கொண்டுள்ளது.

மனிதவள அமைச்சு கடந்த  அக்டோபர் 16ஆம் தேதி அன்று சம்பந்தப்பட்டவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியது.

கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி  வரை மொத்தம் 123 தொழிலாளர்கள் விமான நிறுவனத்திற்கு எதிராக தொழிலாளர் துறையில் தங்கள் மீதமுள்ள ஊதியத்திற்கான கோரிக்கையை தாக்கல் செய்துள்ளனர் என்று அவர் சொன்னார்.

அதன்படி, மனிதவள அமைச்சு சம்பந்தப்பட்ட மற்ற அனைத்து ஊழியர்களையும், அருகிலுள்ள தொழிலாளர் அலுவலகத்தில் விரைவில் தங்கள் ஊதியத்தின் நிலுவைக்கான கோரிக்கைகளைத் தாக்கல் செய்ய முன்வருமாறு கேட்டுக் கொள்கிறது.

தற்போதுள்ள சட்டத்தின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இந்த நடைமுறை அவசியம்.

மனிதவள அமைச்சு தொழிலாளர் துறையுடன் இணைந்து விமான நிறுவனத்தின் ஊழியர்களின் நலன் எப்போதும் பாதுகாக்கப்பட்டு பாதுகாக்கப் படுவதை எப்போதும் கண்காணித்து உறுதிசெய்யும்  என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.